மேரேஜ் பண்ணுவியா மாட்டியா? நயன் தாராவால் வாழும் விக்னேஷ் சிவன்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் லேடிசூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை பல தோல்விகளுக்கு பின் முன்னணி நட்சத்திரம் என்ற பெயரை எடுத்தார். இடையில் காதல் தோல்வி என சில கஷ்டங்களையும் சந்தித்து வந்தார்.
நானும் ரவுடி தான் படத்தினை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 5 வருடங்களுக்கும் மேல் இருவரும் ஒன்றாக அவுட்டிங் பார்ட்டி என காலத்தை போக்கி வருகிறார். சமீபத்தில் காத்து வாக்குல் ரெண்டு காதல் படத்தினை நயன் தாரா, சமந்தா, விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ளார்.
வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அனிரூத் இசையில் டூ டூ டூ பாடல் வீடியோ வெளியாகி வைரலானது.
தற்போது நயன் தாராவுடன் நெருக்கமாக கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இதை பார்த்த ரசிகர்கள் நீ வாழுறப்பா. மேரேஜ் பண்ணுவியா மாட்டியா என்றும் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.