பற்றி எரியும் நயன் தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்.. கோபத்தில் பொங்கி எழுந்த விக்னேஷ் சிவன்..

Nayanthara Vignesh Shivan Gossip Today
By Edward Oct 13, 2022 08:49 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, இயக்குனர் விக்னேச் சிவனை 7 வருடங்களாக காதலித்து வந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் - ஹனிமூன்

திருமணத்திற்கு பின் தாய்லாந்து ஹனிமூன், ஜவான் ஷூட்டிங் என்று இருந்த நயன், மீண்டும் ஸ்பெயின் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கணவருடன் சுற்றி ரொமான்ஸ் செய்து வந்தார்.

இரட்டை குழந்தை

திருமணமாகி 4 மாதமாகிய நிலையில் பல செய்திகள் நயன் தாரா - விக்னேஷ் சிவன் பற்றி வெளியாகி வைரலானது. அப்படி திடீரென தங்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்று குழந்தைகளின் காலை பிடித்து கொஞ்சியபடி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தா விக்னேஷ் சிவன். இதற்கு பலர் வாழ்த்துக்களை அறிவித்து வந்தாலும் விமர்சனங்களும் கூடவே வந்தது. விதிமுறைகளை படி விக்னேஷ் சிவன் - நயன் தாரா தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என்று பலர் கருத்துக்களை முன் வைத்து வந்தனர்.

விக்னேஷ் சிவன் ரியாக்ஷன்

இப்படியெல்லாம் ஒரு பக்கம் சென்றுக்கொண்டிருக்கையில், விக்னேச் சிவன் இந்த விவகாரம் குறித்து சில பதிவுகளை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டுள்ளார். உங்களிடம் அக்கறையாக இருப்பவர்களிடம் மட்டும் கவனம் செலுத்துங்கள். அவர்கள் தான் உங்களிடம் இருப்பார், அதேபோல் யார் உங்களுடன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் உங்களுக்கானவர்கள், இதுதான் உண்மை என்று ஒரு பதிவில் கூறியிருந்தார்.

அதேபோல் மற்றொரு பதிவில், உங்களுக்கான ஒன்று உங்களிடம் சேர வேண்டிய நேரத்தில் சரியான நேரத்தில் வந்து சேரும் வரை பொறுமையாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இப்படி பதிவிட்டது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்திற்கான விளக்கமா? என்று பலர் கூறி வருகிறார்கள்.

GalleryGallery