நயன்தாராவுக்கு இரட்டை பெண் குழந்தைகளா!! கணவர் விக்னேஷ் சிவன் பகிர்ந்த வீடியோ..
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தனக்கான ஒரு இடத்தினை மிகப்பெரியளவில் உருவாக்கியுள்ளவர் தான் நடிகை நயன்தாரா. பாலிவுட்டில் கால்பதித்த நடிகை நயன்தாரா கடந்த 2022ல் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சில மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தார் நயன் தாரா. இதனை தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நயன்தாரா, தங்களின் மகன்களின் பெயரை உயிர், உலக் என பெயரிட்டார். கிடைக்கும் நேரங்களில் தன்னுடைய குழந்தைகளுடன் நேரத்தையும் செலவிட்டு வருகிறார்.
இரட்டை பெண் குழந்தைகள்
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இணையத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். AI மூலம் ரசிகரால் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ தான் அது. அதில், நயன்தாராவுடன் இரட்டை பெண் குழந்தைகளுடன் இருப்பது போன்று ரசிகர் ஒருவர் எடிட் செய்ததை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
நயன்தாராவுக்கு இரட்டை பெண் குழந்தைகளா? என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.