ஜோதிகா செய்ததை நான் செய்யல..இயக்குநர் அதற்காக மிரட்டினார்!! நடிகை விந்தியா ஓப்பன் டாக்..
நடிகை விந்தியா
தமிழ் சினிமாவில் சங்கமம் படத்தில் 17 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை விந்தியா. இப்படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த விந்தியா, படங்களில் வாய்ப்பில்லாமல் அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சங்கமம் படத்திற்கு முன் நான் கமிட்டானது ரிதம் படத்தில் தான். அதற்காக போட்டோஷூட் கூட நடந்தது, அதை சுரேஷ் சந்திரா பார்த்துவிட்டு நான் உன்னை ஹீரோயினாக ஒரு படத்தில் அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறி இயக்குநர் வசந்திடம் கூறினார். அதன்பின் வசந்த் சார் நான் உன்னை அறிமுகப்படுத்துவேன், ஆனால் சங்கமம் படத்தில் நடித்தால் ரிதம் படத்தில் உனக்கு வாய்ப்பு கிடைக்காது, உனக்கு சம்மதமா? என்று மிரட்டினார்.
சங்கமம் சம்பளம்
இப்படி அவர் கூறிவிட்டதால், நான் ரிதம் படத்தில் சிறிய ரோலில் நடிப்பதைவிட ஹீரோயினாக நடிப்பதே சரி என்று, ரிதம் படத்தின் வாய்ப்பை விட்டுவிட்டு, சங்கமம் படத்தில் நடிக்க தேர்வு செய்தேன். அதன்பின் தான் ஜோதிகாவுக்கு ரிதம் படத்தின் வாய்ப்பு கிடைத்தது. நான் சங்கமம் படத்திற்காக முதன்முதலில் வாங்கிய சம்பளம் ஒரு லட்சம் ரூபாய் தான், அதை என் அம்மாவிடம் தான் கொடுத்தேன்.
17 வயதில் நடிக்க வந்த போது என் வாழ்க்கையில் பெரிய கஷ்டங்களை சந்தித்தேன். பேரும் புகழும் பெரியளவில் கிடைத்தாலும் 2008க்கு பின் என் வாழ்க்கையில் சரிவு வந்தது. ரொம்ப மோசமான கருப்பு நாட்கள் என்று அந்த நாட்களை சொல்லலாம் என்றும் ரொம்பவே குண்டாகிவிட்டேன், இதனால் இனிமே நமக்கு வாழ்க்கையில்லை, 17 வயதிலேயே சினிமாவிற்கு வந்ததால் படிப்பும் இல்லை. அப்போது ஜெயலலிதா அம்மா என்னை அழைத்து என்னால் என்ன செய்யமுடியும் என்று நம்பிக்கை கொடுத்தார் என்று விந்தியா கூறியிருக்கிறார்.