துரத்தி விடப்பட்டாரா விக்னேஷ் சிவன்.. கடுப்பில் அஜித் புகைப்படம் விலகல்
நயன்தாராவின் சிபாரிசின்படி ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், திடீரென என்ன நடந்தது என்று தெரியவில்லை விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்று தகவல் வெளிவந்தது.
விக்னேஷ் சிவன் கூறிய கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காமல் போனதன் காரணமாக விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் அவர் வெளியேறினாரா இல்லை வெளியேற்றப்பட்டாரா என்று இதுவரை தெரியவில்லை. அரசல்புரசலாக விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனத்தினால் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஏகே 62 படத்தின் பெயரை எடுத்துவிட்டு, விக்கி 6 என மாற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி அஜித்துடைய முகத்தை கவர் புகைப்படம் வைத்திருந்த நிலையில், தற்போது அந்த புகைப்படத்தையும் மாற்றியுள்ளார் விக்னேஷ் சிவன். இதன்முலம் ஏகே 62வில் விக்னேஷ் சிவன் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
