ஐஸ்வர்யா ராயுடன் அந்த காட்சியே வேண்டாம்!! அஜித்துக்காக ஒட்டுமொத்த கதையை மற்றும் விக்னேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் துணிவு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உலகம் எங்கும் திரையிடப்பட்டது. பொங்கல் பரிசாக ரசிகர்களையும் மக்களையும் ஈர்த்த துணிவு படம் தற்போது 150 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது.

இப்படத்தினை அடுத்து ஒருசில நாட்களில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே தன்னுடைய 62 வது படத்தினை ஆரம்பிக்கவுள்ளார். இப்படத்தின் வேலைகளில் படுபிஸியாக இருந்து வருகிறார் விக்னேஷ் சிவன்.
நடிகை ஐஸ்வர்யா ராய், அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்கள். ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று இருந்த சந்தானம் கூட அஜித்திற்காக துணை கதாபாத்திர ரோலில் நடிக்க பல கோடி சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அஜித் படம் என்றாலே நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் என எதுவும் இருக்காமல் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தினை தான் தேர்வு செய்வார்.

அப்படி விக்னேஷ் சிவனிடம் ஐஸ்வர்யா ராயாக இருந்தாலும் அப்படியொரு காட்சிகள் வேண்டாவே வேண்டாம் என்று கண்டீசன் போட்டிருக்கிறார்.
அஜித் கூறியதால் கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து, அஜித் இரு குழந்தைகளுக்கு அப்பாவாகவும், குடும்ப பின்னணி கொண்ட டான் கதையம்சம் நிறைந்த படமாக விக்னேஷ் சிவன் எடுக்கவுள்ளாராம்.
எதார்த்தமான கதையம்சத்தை இயக்கி ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதோடு அஜித்திற்கான ஒரு படமாக இயக்கவுள்ளது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.