அந்த நடிகை ஓகே!! நயன்தாராவை வேண்டவே வேண்டாம்-ன்னு ஒதுக்கிய அஜித்!! டார்ச்சர் செய்த விக்னேஷ்
ஏகே62
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன், அறிமுகமாகிய பல ஆண்டுகள் கழித்து நடிகர் அஜித்தின் ஏகே62 படத்தினை இயக்க வாய்ப்பு கிடைத்து கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஒன்லைன் ஸ்டோரியை லைக்கா மற்றும் அஜித்திடம் கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். ஆனால் கதையில் சில மாற்றங்களையும் கதாநாயகி தேர்வில் மாற்றம் கொண்டு வர கூறியிருக்கிறார்.

ஆனால் விக்னேஷ் சிவன் 8 மாதங்கள் கழித்து அதே கதையை அஜித், லைக்கா நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். இதனால் கடுப்பாகிய அஜித் விக்னேஷ் சிவன் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதனால் ஏகே 62ல் இருந்து விக்னேஷ் சிவனை லைக்கா நிறுவனம் தூக்கிவிட்டு மகிழ்திருமேனியை புக் செய்திருக்கிறார்.
இதற்கு காரணம் இதுதான் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவன், அஜித்திடன் நடிகையை யாரை போடலாம் என்ற விவகாரத்தில் தான் பிரச்சனையே ஆரம்பித்திருக்கிறதாம்.

நயன்தாரா காரணம்
இதற்கு முழு பிரச்சனை உருவாக விக்னேஷ் சிவனின் மனைவியும் நடிகை நயன் தாரா தான் காரணமாம். ஏகே 62ல் நடிக்க சிபாரிசு செய்த நயன் தாராவையே நடிக்க வைக்கலாம் என்று அஜித்திடம் விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.

ஆனால் அஜித், வேண்டவே வேண்டாம் என்று கூறியதோடு கத்ரினா கைஃப், திரிஷா பெயர்களை கூறியிருக்கிறார். லைக்கா நிறுவனமும் கத்ரினா கைஃப்-ஐ அணுகியதோடு 15 கொடி சம்பளமும் பேசியிருக்கிறார்களாம்.
அதை ஒரு பொருட்டாக கருதாமல் விக்னேஷ் சிவன் நயன் தாராவின் பெயரை கூறியே டார்ச்சர் செய்து வந்துள்ளாராம். அதனால் தான் கடுப்பாகிய அஜித், லைக்கா நிறுவனம் விக்னேஷ் சிவனை தூக்க காரணமாக இருந்துள்ளது.