செத்தா போகபோறேன்!! சுடுகாட்டில் இறப்பதற்கு முன்பே பாடையில் படுத்த மாரிமுத்து!! பிரபல நடிகர் ஓப்பன்..
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தினை பிடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஆதரவும் பெற்று வந்தவர் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து. குணச்சித்திர ரோலில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் சின்னத்திரை சீரியலான எதிர் நீச்சலில் ஆதி குணசேகரன் ரோலிலும் நடித்து வந்தார்.
அப்படி அனைவரையும் கவர்ந்த மாரிமுத்து கடந்த மாதம் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் மாரிமுத்து இறப்புக்கு பின் இறுதியாக ஒரு படத்தில் இறுதி அஞ்சலி போஸ்டருடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்டார். அப்படத்தில் அவருடன் நடித்த நடிகரும் விஜேவுமான விக்னேஷ் சில விசயத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், அந்த படத்தில் நடித்தபோது பாடையில் படுப்பது, இறந்தவருக்கு செய்யும் சடங்கு போன்ற விசயத்தை போய்போய் படுத்து எழுந்து வருவார். இதை நான் பார்த்து என்ன எல்லாத்துக்கும் போறீங்க, உண்மையான சுடுகாடு வேற ஏன் இப்படி பண்றீங்க என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர், இப்படியெல்லாம் பண்ணா நான் உண்மையில் செத்தா போகபோறேன் என்றும் அதெல்லாம் ஒன்னும் இல்லை தம்பி என்று கூறினாராம். என் வாழ்க்கை நல்ல இருக்கு பிஸியாவும் இருக்கேன்.
9 மணிக்கு எனை எல்லா வீட்டிலும் மழை தூறல் போல் விழுகிறேன், அதற்கு சம்பளமாக கேட்டால் கூட அதை தராங்கப்பா என்று கூறியதாக விக்னேஷ் கூறியிருக்கிறார்.