சினேகா, ஜோதிகா-லாம் இப்படியா சுத்துறாங்க.. விக்னேஷ் சிவன் மனைவி நயன்தாராவை அசிங்கப்படுத்திய குடும்ப நபர்
நானும் ரவுடி தான் படத்திற்கு பின் நடிகை நயன் தாரா அப்படத்தின் இயக்குனர் மீது காதலில் விழுந்து காதல் ஜோடிகளாக சுற்றி வந்தனர். 7 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த நயன் எப்போது அவரை கல்யாணம் செய்வார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

வாடகைத்தாய்
ரசிகர்கள் கேள்விகளை பூர்த்தி செய்ய 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஹனிமூன், ஜாவன் படப்பிடிப்பில், மீண்டும் ஸ்பெயின் உள்ளிட்ட பகுதிகளில் அவுட்டிங் சென்று வந்தனர். இப்படி சென்று கொண்டிருந்த நிலையில் தாங்கள் சிறு வயதில் வளர்த்து வந்த விக்னேஷ் சிவனின் பெரியப்பா பெரியம்மாவை திருமணத்திற்கு அழைக்காத செய்தி வைரலானது. விக்னேஷ் சிவனின் அம்மாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் இப்படி திருமணத்திற்கு கூட அழைக்கவில்லை என்று புலம்பி இருந்தனர்.

பெரியப்பா பெரியம்மா
இந்நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் - நயன் தாரா ஜோடி வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றது மிகப்பெரியளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த விசயம் குறித்து சமீபத்தில் விக்னேஷ் சிவன், பெரியப்பா பெரியம்மா பேட்டியில் விமர்சித்து பேசியுள்ளனர். திருமணத்திற்கு கூப்பிடாது ஒரு பக்கம் இருந்தாலும் நயன் தாராவுடன் தனிப்பட்ட வாழ்க்கையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது தப்பென்று.
சினேகா, ஜோதிகா கூட திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் எப்படி அடக்கவுடக்கமான பெண் போல் இருக்கிறார்கள் என்று நயன் தாராவை விமர்சித்துள்ளனர். மேலும் என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அருவத்தக்கத விசயம் தான் இது என்றும் காசுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.