நயன் தாரா, சமந்தா நினைப்பாவே இருக்கும் விக்னேஷ் சிவன்! இப்படி இருந்தா வாய்ப்பிளக்க தான் செய்வாங்க

Nayanthara Samantha Kaathuvaakula Rendu Kaadhal Vignesh Shivan
By Edward May 15, 2022 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் விக்னேஷ் சிவன். நடிகர் சிம்புவின் போடாபோடி படத்தினை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதன்பின் ஒருசில படங்களுக்கு பாடலாசிரியராகவும் விஐபி படத்தின் நடிகராகவும் இருந்து வந்தார்.

அதன்பின் நானும் ரெளடி தான் படத்தின் ஹிட் கொடுத்தப்பின் சூர்யாவின் என் ஜி கே படத்தினை இயக்கினார். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் வரிகளை கொடுத்து வந்த விக்னேஷ் ஆசையாக காதலித்து வரும் லேடி சூப்பர் ஸ்டாருடன் சமீபத்தில் நிச்சயத்தையும் முடித்துள்ளார்.

திருமணம் எப்போது என்று கேட்கும் போதெல்லாம் இருவரும் படங்களின் வேலைகளில் பிஸியாகவும் பண்டிகைகளின் போது ரொமான்ஸிலும் இருந்து வந்தனர்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன் தாரா - சமந்தா நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். தியேட்டரில் மக்கள் ஆதரவுடன் நல்ல வரவேற்பும், வசூல் வேட்டையிலும் தட்டித் தூக்கியது.

இப்படத்தினை பற்றி ரசிகர்கள் பதிவிடும் வீடியோக்கள், புகைப்படங்களை விக்னேஷ் சிவன் எப்போது இணையத்தில் பகிர்ந்து வருவார். தற்போது, அப்படத்தில் சமந்தாவின் பெயர் கதிஜா, நயன் தாரா பெயர் கண்மணி பெயரை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதே நினைப்பாவே இருக்கீங்களா விக்கி என்று கலாய்த்து வருகிறார்கள்.

Gallery