32 வருட சினிமா வாழ்க்கை!! கோட் நடிகர் விஜய்யின் மொத்த சொத்துக்கள் இவ்வளவு கோடியா?

Vijay Actors Tamil Actors Greatest of All Time
By Edward Jun 22, 2024 08:32 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது கோட் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இடையில் அரசியல் விஷயங்களை செய்து வரும் விஜய், தற்போது 50 வயதை கடந்துள்ளார்.

விஜய்யின் பிறந்தநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கோட் படத்தின் ஷாட்ஸ் என்ற வீடியோவை விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளனர்.

32 வருட சினிமா வாழ்க்கை!! கோட் நடிகர் விஜய்யின் மொத்த சொத்துக்கள் இவ்வளவு கோடியா? | Vijay 50Th Birthday Special Net Worth In 2024

இந்நிலையில் இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்து சேர்த்து வைத்த சொத்தின் மதிப்பு எவ்வளவு என்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடி அளவிற்கு சம்பளம் வாங்கும் விஜய் தமிழ் சினிமாவில் டாப் பணக்காரராக திகழ்ந்து வருகிறார்.

விஜய்யின் பெயரில் கிட்டத்தட்ட 474 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகவும், ரஜினி, அஜித், கமல் போன்ற நடிகர்களுக்கு விஜய்யைவிட குறைவான சொத்துக்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.