8 வருடம் கழித்து அப்பாவாகவுள்ள இயக்குனர் அட்லீ!! 400 கோடிக்கு பரிசு கொடுத்த தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் எந்திரன்.
இப்படத்தில் சங்கரின் உதவி இயக்குனராக அட்லீ பணியாற்ற ஆரம்பித்தார். நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின் ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் ராஜா ராணி படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.

முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அடுத்த விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற ஹாட்ரிக் படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்தார். இதனை தொடர்ந்து காப்பி இயக்குனர் என்ற பேர் எடுத்ததால் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் அவருடன் சேர மறுத்துவிட்டனர்.
இதன்பின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன் தாராவை வைத்து ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அட்லீ.
8 வருடங்களுக்கு பின் பிரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லீ தெரிவித்தார். இதற்கு பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அதன் பயனாக விஜய்யின் 67 படத்திற்கு பிறகு 68வது படத்தினை அட்லீக்கு வழங்கியுள்ளாராம். 400 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் அப்டேட்டினை கேட்டு விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.