தெலுங்கு இயக்குனரை நம்பி ஏமாந்து போன சிவகார்த்திகேயன்.. புலம்பும் விஜய் - தனுஷ் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை குறுகிய காலக்கட்டத்தில் எட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் டாக்டர், டான் படங்களின் 100 கோடி வசூலால் தன்னுடைய மார்க்கெட்டையில் வியாபாரத்தையும் ஏற்றினார்.
அதன்பின் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் நேரடியாக வெளியானது. ஆனால் படம் எதிர்ப்பார்த்த படி அமையாமல் நஷ்டத்தை கொடுத்து மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் இந்த தோல்வியால் தனுஷ் மற்றும் விஜய் ரசிகர்கள் கடுமையான கலக்கத்துல் இருந்து வருகிறார்கள். அதற்கு காரணம் தனுஷ் மற்றும் விஜய் நடித்து வரும் அடுத்த படங்கள் தெலுங்கு நேரடி படங்களாக வெளியாகவுள்ளது.
விஜய்யின் வாரிசு படமும், தனுஷின் சார் (வாத்தி) படங்கள் தெலுங்கு இயக்குனர்களால் இயக்கப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தினை இயக்கிய அனுதீப் சொதப்பியதால் இதே நிலைமை விஜய் மற்றும் தனுஷுக்கும் வந்துவிடுமோ என்ற பயத்தில் புலம்பியும் வருகிறார்கள்.