அவனை ரயில்ல தள்ளிவிடுங்க.. மாணவி சத்யா கொலை வழக்கில் பொங்கி எழுந்த இசையமைப்பாளர்..

Vijay Antony Gossip Today
By Edward Oct 14, 2022 02:00 PM GMT
Report

தமிழகத்தில் காதல் தோல்வியால் பெண் பிள்ளைகளை கொலை செய்யும் வழக்குகள் அதிகரித்ததை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் சென்னை பரங்கிமலை இரயில் நிலையத்தில் சத்யா என்ற மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த சதீஷ் என்கிற நபர் காதலிக்க மறுத்ததால் அங்கு சென்று கொண்டிருந்த ரயில் மீது தள்ளி கொலை செய்திருக்கிறார்.

இந்த விசயம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நபர் தலைமறைவாகினார். தனிப்படை அமைத்து போலிசார் சதீஷை கைது செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள்.

அவனை ரயில்ல தள்ளிவிடுங்க.. மாணவி சத்யா கொலை வழக்கில் பொங்கி எழுந்த இசையமைப்பாளர்.. | Vijay Antony Post Case Sathya Murderer

இதுகுறித்து இணையத்தில் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இசையமைப்பாளருடம் நடிகருமான விஜய் ஆண்டனி ஒரு டிவிட் பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில், சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதற்கு பலர் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.