அஜித்துக்கு போன் செய்த விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா! செம பதிலடி
நடிகர் அஜித் கடந்த சில வாரங்களுக்கு முன் கார் ரேஸில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றிபெற்றார். அதை தொடர்ந்து அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
ஆனால், இந்த இரண்டுக்குமே அஜித்தின் நெருங்கிய நண்பரான விஜய்யிடம் இருந்து எந்த ஒரு வாழ்த்தும் வரவில்லை. இதுகுறித்து பலவிதமான சர்ச்சையான கருத்துக்கள் இணையத்தில் எழுந்தன.
இந்த நிலையில், அனைத்து சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதில் "அஜித் சார் கார் ரேஸில் வெற்றி பெற்றதும் விஜய் சாரிடம் இருந்து தான் முதல் வாழ்த்து வந்தது. அதை போல அஜித் சாருக்கு விருது அறிவிக்கப்பட்டதும், விஜய் சாரிடமிருந்து வாழ்த்து வந்தது. இருவருக்குள்ளும் ஆர்மார்த்தமான நட்பு உள்ளது. ஆகையால் விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என வெளிவந்து தகவலில் துளியும் உண்மை இல்லை" என கூறியுள்ளார். இதன்மூலம் இணையத்தில் அளித்த சர்ச்சைகளுக்கு பதிலடி வழங்கப்பட்டுள்ளது.