சங்கீதாவை விருப்பம் இல்லாமல் தான் கல்யாணம் செய்தாரா விஜய்? நடிகர் சொன்ன தகவல்..
விஜய்
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார். அதேசமயம் 69வது படத்தோடு சினிமாவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் முழு நேர அரசியலை காட்டவும் இருக்கிறார். இதற்கிடையில் மனைவியை பிரிந்து நடிகை ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டும் வருகிறார்.
காதல் திருமணமா?
இந்நிலையில் விஜய்யின் திருமணம் காதல் திருமணமா? பெற்றோர்கள் பார்த்து வைக்கப்பட்ட திருமணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. லண்டனில் இருக்கும் சங்கீதா விஜய் மீதுள்ள ஈர்ப்பால் சென்னை வந்து பூவே உனக்காக ஷூட்டிங்கின் போது அவரை சந்தித்துள்ளார்.
சென்னைக்கு சங்கீதா வரும்போதெல்லாம் விஜய் வீட்டில் சந்திப்பதுமாக இருந்ததால் 1997-98 காலக்கட்டத்தில் வீட்டிற்கு வந்த சங்கீதாவிடம் விஜய்யை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்டுள்ளனர்.
அவரும் சம்மதம் என்று தெரிவித்ததால் 1999ல் பெற்றோரின் விருப்பத்துடன் விஜய் - சங்கீதா திருமணம் நடந்தது. விஜய்க்கு அப்போது 25 வயது தான். தற்போது திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகின்றது.
ரமேஷ் கண்ணா
சமீபத்தில் விஜய் நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் திருமணத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது ரமேஷ் கண்ணாவின் மகனைப்பார்த்து, நீ எல்லாம் கொடுத்து வைத்தவன், எனக்குத்தான் என்னோட அப்பா சீக்கிரம் கல்யாணம் செய்து வச்சிட்டாரு என்று விஜய் கூறியிருக்கிறாராம்.
இதனை ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார். அப்படியானால் விஜய் பெற்றோர்களின் வற்புறுத்தலின் பெயரில் தான் திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.