சிகரெட் வாடையே பிடிக்காதுன்னு சொன்ன விஜய்!! எனக்கே அட்வைஸ் செய்தார்...

Vijay Gossip Today Tamil Actors
By Edward Jan 02, 2026 11:45 AM GMT
Report

விஜய் - அனுமோகன்

சினிமாவுக்குள் நிழைந்தபோது பல விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த விஜய் தற்போது அரசியலில் நுழையும் போது விமர்சன ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார். கடைசி படமான ஜனநாயகன் படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து பிரபல நடிகர் அனுமோகன் ஒருசில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு படத்தில் விஜய்யுடன் நான் நடித்தப்போது எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. இப்போது விட்டுவிட்டேன்.

சிகரெட் வாடையே பிடிக்காதுன்னு சொன்ன விஜய்!! எனக்கே அட்வைஸ் செய்தார்... | Vijay Concern For Health Anu Mohan Shares Smoking

சிகரெட் வாடையே பிடிக்காது

நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓரமாக நின்று சிகரெட் பிடித்தேன். விஜய் என்னிடம் ஏதோ சொல்ல வந்தார். என் கையில் சிகரெட் இருப்பதை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டார். என்ன தம்பி என்னாச்சு என்று கேட்டேன், அதற்கு அவர் இல்லை அண்ணா நீங்கள் சிகரெட் பிடிக்கிறீர்கள் என்றார்.

பரவாயில்லை சொல்லுங்கள் என்றதற்கு, எனக்கு அந்த சிகரெட் வாடையே பிடிக்காது, அது உடல்நலத்திற்கு கேடு, நீங்களும் இதை விட்டுவிடுங்கள் என்று சொன்னார். அவர் எனக்கு வயது குறைவானவராக இருந்தாலும், என் உடல்நலம் மீது அக்கறை எடுத்து அதை சொன்னார் என்று நடிகர் அனுமோகன் தெரிவித்துள்ளார்.