விஜய்க்காக தினத்தோறும் அதை செய்யும் தந்தை சந்திரசேகர்.. பலரும் அறியாத ஒன்று!
Vijay
Tamil Cinema
S. A. Chandrasekhar
By Bhavya
விஜய்
தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய். சமீபத்தில் நடைபெற்ற கரூர் பிரச்சனையில் சற்று அமைதியாக உள்ளார்.
பலரும் அறியாத ஒன்று!
இந்நிலையில், விஜய்க்கு அரசியலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் அன்னதானம் செய்து வருகிறார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த அன்னதானத்தால் பயன் பெற்று வருகிறார்கள். இந்த தகவலை வலைப்பேச்சு யூடியூப் சேனலைச் சேர்ந்த பத்திரிகையாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.