புல்லட் பாண்டி வடிவேலுவாக மாறிய விஜய் தேவரகொண்டா! போஸ்டரை வெச்சு செய்த நெட்டிசன்கள்..
தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே தன் பக்கம் ஈர்த்தவர் விஜய் தேவரகொண்டா. அதன்பின் நோட்டா, கீதா கோவிந்தம், டாக்ஷிவாலா, டியர் காம்ரேட், World Famous Lover போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகை சார்மி இயக்கத்தில் லிகர் என்ற படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தற்போது அவரின் ஜிம்பாடியுடன் அமைந்த போஸ்டரை ஹைதராபாத்தை சேர்ந்த சுதர்சன் என்ற தியேட்டரில் பல அடி உயரத்தில் பேனர் ஒன்றினை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
இதனை நெட்டிசன்கள் சிலர் கோவில் படத்தில் புல்லட் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வைகைபுயல் வடிவேலு ஜிம் மாஸ்டராக நடித்திருப்பார். படத்தில் அவர் உடலை மார்ஃபிங் செய்து போஸ்டர் அமைத்திருப்பத்தை வைத்து விஜய் தேவரகொண்டாவை கலாய்த்து வருகிறார்கள்.
#liger cutout resemblance. #VijayDevarakonda @Akvicky_2 @giri_prasadh_r pic.twitter.com/3rFd6mp8Sn
— arjun arj (@arjunnatarajan6) July 20, 2022