சூர்யா பட விழாவில் வாயை கொடுத்த வாங்கி கட்டிக்கொண்ட விஜய், மன்னிப்பு கடிதமே வந்துருச்சா

Vijay Deverakonda Retro
By Tony May 03, 2025 11:30 AM GMT
Report

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் இளம் நடிகர். இவர் அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேமஸ் ஆனவர்.

இதை தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டாக்ஸிவாலா, லைகர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் லைகர் இவருக்கும் பெரும் தோல்வியை கொடுத்தது.

அதை தொடர்ந்து நடித்த குஷி படம் ஓரளவிற்கு இவருக்கு ஹிட் படமாக அமைந்தது, இந்நிலையில் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இவர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

அங்கு இவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றிய பேசிய கருத்து பெரும் சர்ச்சை ஆனது, அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

தற்போது தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, நான் எல்லா சமூகத்தையும் மதிப்பவன் என மன்னிப்பு கடிதம் வெளியிட்டுள்ளார்.