ஒரு தட்டு பிரியாணிக்காக காலில் விழும் விஜய் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ

Vijay Viral Video Gossip Today
By Edward Nov 20, 2022 09:17 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராகவும் 100 கோடியில் சம்பளம் வாங்கும் டாப் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து விஜய் படத்தினை வெளியிட சில சிக்கல்களை சந்துள்ளார்.

மற்ற மொழி படங்களுக்கு இடமில்லை என்று தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கம் கூறியதை அடுத்து இதற்காக தமிழ் பிரபலங்கள் ஆதரவளித்து வருகிறார்கள்.

இதற்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்களை விஜய் சந்திக்கவுள்ளார் என்று நேற்று தகவல் வெளியானது.

இதற்காக இன்று விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் விஜய்க்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

ரசிகர்களுக்காக பிரியாணியும் தயாராகிய நிலையில் கட்சியின் பொறுப்பில் இருக்கும் Bussy anand-யின் காலில் விஜய் ரசிகர்கள் விழும் காட்சி இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.