எப்போ தான் தளபதி வெளில வருவீங்க...ரசிகர்கள் ஏக்கம், மற்றவர்கள் கிண்டல்
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும். ஆனால், இவரோ சினிமாவை விட்டுவிட்டு தற்போது தீவிர அரசியலில் குதிக்க இருக்கின்றார்.
இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், படங்களில் விஜய்யை இனி பார்க்க முடியாது என்ற வருத்தம் அவர்களிடம் மிகவும் உள்ளது.
அதோடு விஜய் அரசியலில் தற்போது வரை எந்த ஒரு அதிரடி விஷயங்களையும் செய்யவில்லை, சில மாநாடு, ரோட் ஷோ நடத்தினாலும் மற்ற அரசியல்வாதிகள் போல் விஜய் இறங்கி அடிக்கவில்லை.

நேற்று இந்தியாவின் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று நடத்திய டிபேட் ஷோவில் பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
ஆனால், விஜய் அந்த பக்கம் கூட வரவில்லை, அதோடு அந்த பத்திரிகையாளர்கள் அனைவரையும் வீட்டில் வர வைத்து ஆப் லைனில் பேசி பேட்டி கொடுத்துள்ளார், இது விஜய் ரசிகர்களையும் இன்னும் வருத்தப்பட வைத்துள்ளது, எப்போ தான் தளபதி வெளில வந்து பத்திரிக்கை, மக்கள் என நேரடியாக சந்தித்து பேசுவீர்கள் என இணையத்தில் கேட்டு வருகின்றனர்.