தியேட்டரை நொறுக்கிய விஜய் ரசிகர்கள்! பீஸ்ட் ட்ரைலர் பார்த்துவிட்டு இப்படியா பண்றது

Vijay Beast Vijay Fans
By Parthiban.A Apr 03, 2022 07:20 AM GMT
Report

விஜய்யின் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் தான் இப்போது இணையத்தில் பெரிய ட்ரெண்ட். படம் முழுக்க ஆக்ஷன் திரில்லர் படம் போல தான் ட்ரைலரில் காட்டப்பட்டது. ஆனால் நெல்சனின் முந்தைய படங்கள் போல டார்க் காமெடி எப்படி இருக்கும் என தெரியலயே என ரசிகர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நேற்று பல தியேட்டர்களில் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை திரையிட்டனர். அங்கு விஜய் ரசிகர்கள் கூட்டமாக சென்று ட்ரைலரை பார்த்து கொண்டாடினார்கள்.

அப்படி நெல்லை ராம் முத்துராம் சினிமாஸில் கொண்டாட்டம் நடைபெற்றது. தியேட்டரில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடிய நிலையில், எல்லோரும் வெளியே சென்ற பிறகு தான் அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி தெரியவந்திருக்கிறது.

பல சேர்கள் மற்றும் கதவுகளை உடைத்து அவர்கள் சேதப்படுத்தி இருக்கின்றனர். இதற்கு பெயர் தான் கொண்டாட்டமா என பலதரப்பினரும் கேட்டு வருகிறார்.