வாரிசு பாசிட்டிவ் விமர்சனத்திற்காக ஒரு கோடி கொடுத்த விஜய்!! வெளிச்சத்துக்கு வந்த ப்ளூ சட்டை மாறன் செயல்..

Vijay Varisu Blue Sattai Maran
By Jai Jan 09, 2023 08:58 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வெளியாகும் அனைத்து படங்களையும் யூடியூப் சேனலில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதில் முக்கிய பிரபலமாக இருப்பவர் ப்ளூ சட்டை மாறன். நல்ல படங்களையும் படுமோசமான வார்த்தையில் விமர்சித்து காசு சம்பாதிப்பதாக பல நட்சத்திரங்கள் கண்டித்தும் இருக்கிறார்கள்.

அந்தவகையில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தினை பாசிட்டிவ் விமர்சனத்தை கூற நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.

அதில், விஜய்யின் ரசிகர் ஒருவர், பிரபல இணையதள போட்ட செய்தி பதிவினை பகிர்ந்திருந்தார். அதை ப்ளூ சட்டை மாறனும் பகிர்ந்துள்ளது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.