தளபதி இன்! ஏகெ அவுட்! ஓட்டு போட அஜித் வராததற்கு என்ன காரணம்..

ajith vijay localbodyelection election2022
By Edward Feb 20, 2022 11:30 AM GMT
Report

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என ஓட்டு போட வாக்கு மையத்திற்கு வந்தனர். கடந்த ஆண்டு சைக்கிளில் வந்த விஜய் சிகப்பு காரில் கருப்பு மாஸ்க் அணிந்து வாக்களித்து சென்றார்.

மேலும் சில நட்சத்திரங்கள் வந்த நிலையில் அரசியலில் களமிரங்கி பின்வாங்கி நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை. அவரை போல் தனுஷ், சிவகார்த்திகேயன், திரிஷா, வடிவேலு, விஜய்காந்த் போன்றவர்கள் கூட வாக்களிக்க வரவில்லையாம்.

எப்போது முதல் ஆளாக வரிசையில் நின்று ஓட்டு போட வரும் நடிகர் அஜித் வராதது அதிர்ச்சியளித்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்று பல விணவி வரும் நிலையில் என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது.

என்ன ஆச்சு அவருக்கு என்று தீவிரமாக தேடுகையில் அஜித் சென்னையிலேயே இல்லையாம். அதுமட்டுமில்லாமல் பெருந்தொற்று அதிகரித்து காணப்படும் காரணம் கூட இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாஸ்க் அணியாமல் வந்த ரசிகரை தட்டிவிட்டு பிடுங்கினார். பெரிய விஷயமாக இருந்தது.