நடிக்கமாட்டேன் என்ற முடிவுக்கு வந்த தளபதி விஜய்!! உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் 100 கோடி சம்பளம் வரை வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்தினை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் தீவிர பிஸி ஷூட்டிங்கில் நடித்து வருகிறார்.
தற்போது லியோ குறித்தும் விஜய் குறித்தும் பல நட்சத்திரங்களிடம் ரசிகர்களும் ஊடகவியலாளர்களும் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், விஜய் ஆசைப்பட்ட சில விசயத்தை பகிர்ந்துள்ளார்.
பிரியமுடன் படத்தில் இருவரும் பணியாற்றிய போது, ஒருமுறை 2000 ஆண்டிருக்கு பின் நடிக்கப்போவதில்லை என்றும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் விஜய் கூறியிருந்தாராம்.
ஆனால் 2000 ஆண்டிருக்கு பின் நடிப்பில் முழு கவனம் செலுத்தி மாஸ் நடிகராக மாறிவிட்டார். தற்போது விஜய் மகன் சஞ்சய் மூலம் அந்த ஆசையை நிறைவேற்றி வருகிறார்.