விஜய்யிடம் இந்த விஷயத்தில் தோற்றுப்போன ரஜினி, அஜித்! அப்போ வலிமை இல்லையா?

Ajith Kumar Rajinikanth Vijay Valimai
By Edward May 22, 2022 05:57 PM GMT
Report

முன்பெல்லாம் படத்தின் கதையை வைத்தும் எத்தனை நாள் படம் ஓடியது என்பதை வைத்தும் தான் படம் வெற்றியா தோல்வியா என்று கணித்து கூறுவார்கள். ஆனால் தற்போது படத்தின் வசூலை வைத்து தான் படம் வெற்றியா பிளாக் பஸ்டாரா, தோல்வியா என்பதை கணித்து வருகிறார்கள்.

அப்படி முன்னணி நடிகர்களின் படம் வெற்றி பெற்றாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே வெற்றி என்று அறிவிக்கப்பட்டும் வருகிறது. தயாரிப்பாளர்கள் நடிகர்கள் மற்றும் கதையை நம்பி தான் பணத்தை முதலீடு செய்கிறார்கள்.

அப்படி அவர்கள் போடும் பணத்திற்கு லாபம் கிடைத்தால் தான் அடுத்த படத்தை நிதி நெருக்கடி இல்லாமல் அவர்களால் சமாளிக்க முடியும். அந்தவகையில் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் படங்கள் தான் பிளாக் பஸ்டர் படமாக இருந்து வருகிறது.

ஆனால் சமீபத்தில் வெளியான படங்கள் விமர்சனங்களை மோசமாக பெற்றாலும் நல்ல லாபத்தை ஈட்டித்தந்துள்ளது. அதற்கு காரணம் நடிகர்களின் மார்க்கெட் தான். அப்படி அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் வசூல் சாதனையையும் படத்தது.

இந்நிலையில் இப்படங்களில் அதிக வசூல் செய்த படமான அஜித்தின் வலிமை பெற்றதாக கருதி வந்தனர். ஆனால் வலிமையை விட லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படம் தான் தற்போது வரை நம்பர் ஒன் இடத்தில் நீடித்து வருகிறது.

இதை வலிமை படத்தின் விநியோகஸ்தர் அன்புச்செழியன் சமீபத்தில் நடந்த விழாவில் கூறியிருந்தார், அவரே கூறியதால் விஜய் ரசிகர்கள் இணையத்தில் மாஸ்டர் படத்தினை வைத்து டிரெண்டாக்கி வருகிறார்கள்.

தற்போது இந்த இடத்தினை நிறப்ப சிவகார்த்திகேயனின் டான் படம் உருவெடுத்து வசூல் சாதனை பெற்று 100 கோடியை 20 நாட்களுக்குள் நெருங்கும் என கூறப்படுகிறது.