கூட இருந்தே குழி பறிக்கும் புஸ்ஸீ!! மிஸ்கின் விசயத்தில் பொம்மையாக மாறிய தளபதி விஜய்..
லியோ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான வேலைகளில் லோகேஷ் கனகராஜ் - விஜய் மும்முரமாக பல வேலைகளை செய்து வருகிறார்கள்.
நாளுக்கு நாள் அதன் எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இயக்குனர் மிஸ்கின் விஜய்யை ஒருமையில் பேசியது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது.
இந்த விசயம் பற்றி சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் மிஸ்கினுக்கு அஞ்சலி போஸ்டர் அச்சடித்து ஒட்டியதெல்லாம் கீழ்த்தனமான செயல் என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி விஜய் காதுக்கு சென்றிருக்க வேண்டும், ஆனால் அது தெரிந்தும் விஜய் பொம்மைப்போல் இருக்கிறார்.
அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த மாதிரியான பிரச்சனைகள் உருவாகும் முன்பே அதை ஏதாவது சொல்லி நிறுத்தாமல் கண்டுகொள்ளாமல் விட்டு வரும் விஜய் எப்படி நாட்டில் நடக்கும் பிரச்சனையை தட்டிக்கேட்பார் என்று கேள்வி கேட்டும் உள்ளார்.
இதன் பின்னால் சாவிக்கொடுத்து இயக்க வைக்கும் புஸ்ஸீ ஆனந்த் ஒரு கட்டத்தில் குழிபறிக்கவும் காத்திருக்கிறார் என்றும் காரசாரமாக கேட்டுள்ளார்.