விஜய்யின் லியோ படம் இந்த படத்தின் அட்டர் காப்பியா!! சூப்பர் ஸ்டாரையும் விடலையா லோகி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 67வது படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் படக்குழுவில் இணைந்த நடிகர் நடிகைகளின் லிஸ்ட் இணையத்தில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
மேலும் லோகேஷ் கனகராஜின் சினிமா யூனிவர்ஸ் படமாக விஜய்யை வைத்து தனிக்கதையில் 67வது படம் உருவாகி வருகிறது. சில தினங்களுக்கு முன் படக்குழுவினர் தனிவிமானத்தில் காஷ்மீருக்கு ஷூட்டிங்கிற்கு சென்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டிலோடு சேர்ந்த படத்தின் பிரமோ வீடியோவும் வெளியாகும் தேதியும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். லியோ Bloody Sweet என்ற தலைப்புடன் விஜய் சாக்லெட் ஃபேக்ட்ரியில் கத்தியுடன் முறைத்தபடி இருக்கும் வீடியோ வெளினாது.
மேலும் படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதை அறிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் ஹாலிவுட் படத்தில் காப்பியாக இருக்கிறது என்றும் லியோ காப்பி தூள் கம்பனி என்றும் கூறி வருகிறார்கள்.
மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கோஸ்ட் ரட்சன் என்ற படத்தின் டீசர் காட்சியை போல் இந்த பிரமோ வீடியோ இருக்கிறது என்றும் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஆடையை போல் விஜய் அப்படியே அந்த ஆடையை போட்டிருப்பதையும் காப்பி என்று கூறி வருகிறார்கள்.
என்ன லோகி இதெல்லாம் என்று லோகேஷ் கனகராஜை கேள்வி கேட்டு கிண்டல் செய்து சிலர் ஹேட்டர்ஸ் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
………. pic.twitter.com/wAs7vHpddx
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 3, 2023
Nice ad tbh pic.twitter.com/WzwExUwdeK
— Trollywood (@TrollywoodX) February 3, 2023
Once upon a time there lived #TheGhost pic.twitter.com/1t44xjuxlH
— Trollywood (@TrollywoodX) February 3, 2023
