சங்கீதாவிற்கு முன் இளம் நடிகையை காதலித்த நடிகர் விஜய்.. சும்மா விடுவாரா எஸ்.ஏ. சந்திரசேகர்
love
vijay
sangeetha
sangavi
sa chadraseker
By Kathick
தமிழ் சினிமாவில் தற்போது வசூல் மன்னனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவருக்கு சங்கீதா என்பவருடன் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு அழகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு முன்பு நடிகர் விஜய் பிரபல நடிகை சங்கவியை காதலித்துள்ளாராம். அவரும் நடிகர் விஜய்யை காதலித்து வந்ததாக அப்போது பத்திரிகைகளில் பல கிசுகிசுக்கள் வந்துள்ளன. ஏனென்றால், இருவரும் படங்களில் மிகவும் நெருக்கமாக பல காட்சிகளில் நடித்துள்ளது தான், இந்த கிசுகிசுக்கு காரணமாக இருந்தது.
ஆனால், இதனை கவனித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்த்ரசேகர், இந்த காதலுக்கு முழுக்கு போட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதன்பின், நடிகை சங்கவி தனது வழியை பார்த்துபோய் விட்டதாகவும் கூறப்படுகிறது.