9 ஆயிரம் கோடி ஆட்டயபோட்டவருக்கு 2000 அபராதம்! அந்த சில்லரைக்கு விஜய் மல்லையா எங்க போவாரு..
கிங்க் ஆப் குட் டைம்ஸ் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டவர் விஜய் மல்லையா. கிங் ஃபிஷர் நிறுவனத்தின் தலைவராக இருந்து கொண்டு ஐபிஎல், எஃப்1 ரேஸ் என்று பல தொழில்கள் செய்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் எஸ்பிஐ வங்கியின் 9000 ஆயிரம் கோடிக்குக்கு மேல் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடி தலைமறைவாகினார்.
இந்நிலையில் இழுப்பறியாக இருந்து வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 4 மாதங்கள் சிறைத்தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 8 மாத வட்டியுடன் கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
அப்படி கட்டவில்லை என்றால் 2 மாதங்கள் தண்டனை நீட்டிக்கவும் அவரது சொத்துக்கலை முடக்கவும் ஆணையிட்டுள்ளனர். இதனை பொதுமக்களுக்கு என்றால் வேறொரு சட்டம் பணக்காரனுக்கு ஒரு சட்டமா என்றும் அவ்வளவு பெரிய சில்லரைக்கு விஜய் மல்லையா எங்க போவாரு என்றும் கலாய்த்து வருகிறார்கள்.