சங்கீதாவிற்கு முன்பு அந்த பிரபலத்தின் மகளை திருமணம் செய்யவிருந்த விஜய்!! யாரை தெரியுமா?
பிரபல இயக்குனரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான விஜய், தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.
லியோ படத்தை அடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் பேங்காக்கில் நடந்து முடிந்தது. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, ஜெயராம், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், " ஷோபாவின் தம்பி சுரேந்தர். இவர் சினிமாவில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்தார்”.
“இவரது மகளை தான் விஜய் முதல் முதலில் திருமணம் செய்யவிருந்தார் ஆனால் அதற்குள் சங்கீதா விஜய் இடையே காதல் மலர்ந்தது. சங்கீதாவை ஷோபாவுக்கும் பிடித்து இருந்ததால் சுரேந்தரின் மகளை திருமணம் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.