30 வயது வித்தியாசமா!! கில்லி பட நடிகரின் இரண்டாம் மனைவியின் உண்மையான வயது இதுதான்..
நடிகர் விஜய்யின் கில்லி படத்தில் அவருக்கு தந்தையாகவும் போலிஸ் அதிகாரியாகவும் நடித்து பிரபலமானார். அதன்பின், தில், பாபா, ஏழுமலை, தமிழன், ராமச்சந்திரா, தூம், ஆறு, குருவி, பீமா, உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளும் 200க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். பின்னணி பாடகியான ராஜோஷி என்பவரை முதல் திருமணம் செய்து ஒரு மகனை பெற்றார்.
தற்போது 60 வது வயதில் ரூபாலி பருவா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி.
இந்நிலையில் நடிகர் ஆஷிஷ் அவர்களின் இரண்டாம் மனைவிக்கு இவ்வளவு தான் வயதாகிறது என்று விளக்கம் கொடுத்துள்ளார். தன் மனைவியின் உண்மையான வயது 33 என்றும் தனக்கு 57 வயதாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.