பீஸ்ட்-டில் ஒருவேலை விஜய் இல்லன்னா இதுதான் நடந்திருக்கும் ? என்ன நெல்சா இப்படி பிளான் போட்டுருக்க?

vijay nelson thalapathy anirudh beast
By Edward Apr 05, 2022 04:27 AM GMT
Report

ஒரு படம் உருவாக இயக்குனர்கள் கதையை எழுதியப்பின் யார் இப்படத்தில் நடித்தால் சரியாக சூட்டாகும் என்று யோசித்து நடிகர்களை தேர்வு செய்வார்கள். தற்போது ஒரு கதாநாயகனுக்கே உரித்தான கதையை எழுதி அவரிடமே சென்று கதை கூறுவார்கள்.

அப்படி உருவான கதை தான் பீஸ்ட் படமாம். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களுக்கு பிறகு விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான படம் பீஸ்ட். இக்கதையை இயக்குனராக இல்லாமல் விஜய்யின் ரசிகராக இருந்து இப்படத்தின் கதையை உருவாக்கினேன் என்று ஆரம்பத்தில் இருந்தே நெல்சன் கூறியிருந்தார்.

தற்போது ஒருவேளவி விஜய் இப்படத்தில் நடிக்காமல் இருந்தால் இக்கதையே இல்லாமல் போயிருக்கும் என்று கூறியுள்ளார் நெல்சன். வேறொரு ஹீரோவை வைத்து என்னால் அந்த கதையை படமாக எடுத்திருக்க முடியாது.

ஏனென்றால் ஒவ்வொரு காட்சியும் வசனமும் விஜய்க்காகவே பார்த்து பார்த்து எழுதியதால் அக்கதையில் வேறொரு ஹீரோவை நடிக்க வைக்க முடிந்திருக்காது என கூறியுள்ளார் நெல்சன். ஆனால் பீஸ்ட் ஒருசில படங்களில் தழுவலாகவும் இருப்பதை வைத்து நெட்டிசன்கள் நெல்சனை கலாய்த்தும் வருகிறார்கள்.