தலை போனாலும் பரவாயில்லை? விஜய் விஷயத்தில் அப்படிவே இப்படி செய்த தந்தை
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் இந்த உயரத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் தான். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தனது மகன் விஜய்யை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்படத்திற்கு பிறகு விஷ்ணு, ரசிகன் செந்தூரப்பாண்டி உள்ளிட்ட படங்களை விஜய்யை வைத்து இயக்கினார் எஸ் ஏ சி. இதன்பின் முன்னணி நட்சத்திரமாக தானே முன்னேறி இந்த இடத்திற்கு வந்துள்ளார் விஜய்.
இந்நிலையில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் பெரிய ரிஸ்க்கினை எடுத்திருக்கிறார் அவரது தந்தை. இதுகுறித்து அப்படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் கனல் கண்ணன் விஷ்ணு படத்தில் விஜய்யுடன் பணியாற்றிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். தானே எனக்கு இதுவேண்டும் என்று கேட்பாராம். அப்படி ஒருமுறை, விஜய்யின் இண்ட்ரோ சீனில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு விஜய் வரவேண்டும் என்று இயக்குனர் எஸ் ஏ சி சார் கூறினார்.
விஜய்க்கு கண்ணாடி என்றாலே அலர்ஜிதான். அதற்கு ரொம்ப ரிஸ்க் சார் விஜய்க்கு தலையில் அடிபடலாம் என்றேன். மாஸ்டர் வேண்டாமே என்று விஜய் கேட்டார். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியதும் அதை செய்து முடித்தார்.
அப்போது விஜய்க்கு கிளாஸ் தலையில் குத்தியது. இதனால் கோவித்துக்கொண்டு சென்றுவிட்டார். இப்படியாகும் என்று கேட்டீங்களா என்று திட்டினார் விஜய் என கூறியுள்ளார்.