சமந்தாவிற்கு என்னாச்சோ ஏதாச்சோ பதறும் ரசிகர்கள்! ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இது தான் நடந்தது...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு, சகுந்தலா உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து காஷ்மீரில் நடித்து வருகிறார்.
இதற்காக 30 நாட்கள் படப்பிடிப்பில் சமந்தா பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுக்கும் விபத்து ஏற்பட்டதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வந்தது. குஷி என பெயரிடப்பட்ட இப்படத்தின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டடு.
அப்போது ஆற்றின் குறுக்கே பைக்கில் கலந்து செல்வது போன்ற காட்சியில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் நடித்திருந்தனர். அப்போது திடீரென நிலை தடுமாறி ஆற்றில் தவறி விழுந்ததாகவும் இதனால் இருவருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
படப்பிடிப்பு இதற்காக நிறுத்தப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகி சமந்தா, விஜய் தேவரகொண்டா வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி எல்லாம் பொய். அப்படியொரு நிகழ்வு நடக்கவில்லை முதல் கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் முடிந்துள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Fake news alert:
— Vamsi Kaka (@vamsikaka) May 24, 2022
"There are few reports that #VijayDeverakonda and #Samantha were injured while shooting for #Kushi movie.There is no truth in this news.
The entire team returned to Hyd yesterday after successfully completing 30 days of shooting in Kashmir.Dont believe such news"