அன்று சாய்ரா பானு..இன்று சங்கீதா விஜய்!! அதிர வைத்த விவாகரத்து சம்பவம்..
அதிர வைத்த விவாகரத்து
திரைத்துறையை பொறுத்தவரையும் பிரபலங்களின் விவாகரத்துக்கள் தற்போது அதிகரித்துக் கொண்டே போகிறது. அதேசமயம் சில ஜோடிகள் எல்லாம் கனவில்கூட பிரிய மாட்டார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருப்பார்கள் அப்படிப்பட்ட ஜோடிகள் திடீரென விவாகரத்தை அறிவித்து அதிர்ச்சி கொடுப்பார்கள். சமீபத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்ற நாடியிருக்கிறார். இதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

திருமணமான நாளில் இருந்து 27 ஆண்டுகளாக அமைதியாக இருந்து வந்த சங்கீதா, இனியும் பொறுக்கமுடியாது என்று நீதிமன்றம் சென்றிருக்கிறார்.
சாய்ரா பானு
அப்படி சங்கீதா விவாகரத்து கேட்டிருப்பதை பார்க்கையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா பானு தான் நினைவுக்கு வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் வாழ்க்கையில் மட்டுமில்லை, அவர் அகராதியில் கூட விவாகரத்து இருக்காது என்று நினைத்து வந்தோம். அப்படியிருக்கும் போது தன் வக்கீல் மூலம் 2024 நவம்பர் மாதம் விவாகரத்தை அறிவித்தார் சாய்ரா பானு.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து வேண்டும் என்றும் அவர் கேட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியை கவனித்துக் கொள்வது கணவரின் கடமையாகும். அந்த கடமையை செய்ய ரஹ்மான் நிச்சயம் மறுக்கமாட்டார். அப்படியிருக்கும்போது ஏன் விவாகரத்து என்று ரசிகர்கள் மனமுடைந்து போனார்கள்.
திருமணமாகி 29 ஆண்டுகள் கழித்து விவாகரத்து கேட்ட சாய்ரா பானு, மீடியாக்கள் தன்னை ஏ ஆர் ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று குறிப்பிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், எங்களுக்கு இன்னும் விவாகர்த்தாகவில்லை. என்னை மாஜி மனைவி என்று கூறாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்தவொரு வார்த்தையை கேட்ட ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்கள் சாய்ரா பானு நிச்சயம் சேர்ந்துவிடுவார் என்ற நம்பிக்கையடைந்தனர்.

சங்கீதா விஜய்
ஆனால் விஜய் விஷயத்தில் அவரது மனைவி சங்கீதா மீண்டும் சேர்ந்து வாழவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. திருமணத்தை மீறிய உறவில் நடிகையுடன் என் கணவர் இருக்கிறார் என்றும் எவ்வளவோ கண்டித்தும் அதை தொடர்ந்து இருப்பதால் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் அசிங்கமாக இருப்பதாக மனுவில் சங்கீதா கூறியிருப்பதால் சங்கீதா சேரமாட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.