விஜய் சங்கீதா விவாகரத்து வதந்திக்கு முக்கிய காரணமே இதுதான்!! வெளியான உண்மை தகவல்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என புகழப்பட்டு வருபவர் நடிகர் விஜய். தற்போது வாரிசு படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து வதந்தி
விஜய் சமீபகாலமாக செல்லும் நிகழ்ச்சிகளுக்கு தன் மனைவியுடன் வரவில்லை என்ற கருத்தும் அட்லீ மனைவி பிரியாவின் வளைக்காப்பு நிகழ்ச்சிக்கும் சங்கீதா விஜய்யுடன் வராமல் தவிர்த்தார் என்ற செய்தியும் வெளியானது. இதை வைத்து சிலர் விக்கிப்பீடியா தளத்தில் விஜய்க்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும் கீர்த்தி சுரேஷை மணக்கவுள்ளதாகவும் எடிட் செய்யப்பட்டதால் இந்த செய்தி பூதகரமாக வெடித்து விவாகரத்து வதந்திக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

முக்கிய காரணம்
இந்த வதாந்திக்கு முக்கிய காரணமே சங்கீதா விஜய்யுடன் இல்லாதது தான். அதாவது சங்கீதா சில ஆண்டுகளாக மாமனார் எஸ் ஏ சி-யுடனும் மாமியார் ஷோபாவுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்துள்ளாராம். விஜய்யின் சம்பளத்தினை கூட சங்கீதா மாமனாரிடம் தொழில் நுட்பமாக கொடுக்கப்பட்டு வருவதாகவும் இது விஜய்யின் தந்தை தாய்க்கு பிடிக்கவில்லை என்ற காரணமும் உள்ளதாம்.
மேலும் ஆடியோ லான்ச்சிற்கு விஜய்யின் பெற்றோர்கள் வருவதாக இருப்பதை முன்பே அறிந்துதான், சங்கீதா சில மாதங்களுக்கு முன்பே தன் தந்தை இருக்கும் லண்டனுக்கும் குழந்தைகளுடன் அமெரிக்காவிற்கு வெகேஷனுக்கு சென்றிருந்தாராம்.
அதனால் தான் சங்கீதா வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சில நிகழ்ச்சிகளுக்கு விஜய்யுடன் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி சாதாரண ஒரு விசயத்தில் சிலர் விவாகரத்து என்று பரப்பிவிட்டு வருகிறாகள் என்று தெரியவந்துள்ளது.