விஜய், சங்கீதா திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் விஜய், தற்போது அதிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். அண்மையில் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அடுத்ததாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
விஜய் - சங்கீதா
நடிகர் விஜய் தனது மனைவியை விட்டு பிரிந்துவிட்டதாக பல விதமான கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால், விஜய்யின் மனைவி சங்கீதா, மகள் திவ்யாவின் படிப்பிற்காக வெளிநாட்டில் இருந்தாராம். தற்போது இங்கு வந்துவிட்டார் என்றும், இருவரும் ஒன்றாக சேர்ந்துதான் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதன்மூலம் பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட சிலர் இதுகுறித்து தொடர்ந்து பேசி, சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில், நடிகர் விஜய் - சங்கீதாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத விஜய்யின் திருமண புகைப்படங்கள் இதோ..


