தனியா வாங்க முத்தம் கொடுக்கிறேன்..மேடையில் அந்த பிரபலத்துடன் அப்படி பேசிய விஜய் சேதுபதி
Vijay Sethupathi
Tamil Cinema
Top10 Tamil Cinema
Tamil Actors
By Dhiviyarajan
விஜய் சேதுபதி
ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி,தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார்.
இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை அதிகரித்து வருகிறார்.
இறைவன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி ஜெயம் ரவி பற்றி பேசினார். அதில் அவர், பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான். அவர் அருமையான மனிதர். போகன் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அந்த சமயத்தில் வேறொரு படத்தில் பிஸியாக இருந்ததால் என்னால் நடிக்க முடியாமல் போனது. இனிமேல் வாய்ப்புகள் வந்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன்.
நீங்க தனியா வாங்க உங்களுக்கு முத்தம் கொடுக்கிறேன் என்று விஜய் சேதுபதி நகைச்சுவையாக கூறினார்.