அதுக்கு இதுவே பரவாயில்லை! புஷ்பா படத்தை மிஸ் செய்த வி.சே..
தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஆக்டராக இருந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். முன்னணி நடிகராக இருக்கும் அல்லுஅர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத்பாசில் இணைந்து நடித்த படமாகி வெளியாகியது புஷ்பா.
சந்தனமர கடத்தலை மையமாக எடுத்து வெளியான இப்படம் 220 கோடிக்கும் மேல் வசூலை பெற்று தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பகத் பாசிலுக்கு பதில் விஜய் சேதுபதி தான் கமிட் செய்யப்பட்டார்.
கால்ஷீட் இல்லாத காரணத்தால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார் விஜய் சேதுபதி. அவருக்கு பதில் மலையாளத்தில் பீக் நடிகராக இருக்கும் பகத் பாசிலை கமிட் செய்து நடிக்க வைத்துள்ளனர்.
இதற்கு பலர் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி படங்களுக்கு பதில் புஷ்பா படத்திலாவது நடித்திருக்கலாம் எனவும் அதனால் கோடியிலாவது புறண்டு இருக்கலாம் என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.