உலகநாயனகனின் விக்ரம் படத்தில் 10 கோடி சம்பளமா? பிரபல நடிகரால் அதிர்ச்சியில் இயக்குநர்!

anirudh kamalhaasan vijaysethupathi logesh kanagaraj fahadhfaasil
By Edward May 18, 2021 02:07 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் உலகநாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். குழந்தை நட்சத்திரமாக நடித்து ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் 230 படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். கடைசியாக கமல் ஹாசன் நடிப்பில் விஷ்வரூபம் 2 2018ல் வெளியானது.

அதன்பிறகு ஆரசியல், பிக்பாஸ், கொரோனா வைரஸ் என சில படங்களின் ஒப்பந்தம் தள்ளிப்போனது. இந்தியன் 2 படப்பிடிப்புகள் விபத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகரம், கைதி, விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவெடுத்துள்ளார்.

இதை நடிகர் கமல்ஹாசன் உறுதியும் செய்து புகைப்படத்தோடும் படத்தின் விக்ரம் என்ற டைட்டில் டீசரையும் வெளியிட்டார். இந்நிலையில் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்று ஒப்பந்தம் பேசப்பட்டு வருகிறது. தற்போது இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பஹத் பாசிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதில் மக்கள் செல்வம் விஜய் சேதுபதி வில்லனாக பேசப்பட்டுள்ளாராம். இதற்கு முன் நடன இயகுநரும் நடிகருமான ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தமான நிலையில் படத்தில் இருந்து விலகினார். அவரின் கதாபாத்திரத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாம்.

பல படங்களின் கால்ஷீட் அதிகமாக இருப்பதால் மற்ற படங்களில் நடிக்கும் போதும் கால்ஷீட் கேட்கக்கூடாது என்றும் சம்பளம் 10 கோடி வேண்டும் என்றும் பல கண்டீஷன்களை போட்டுள்ளார் விஜய் சேதுபதி. ஏற்கனவே, பேட்ட படத்தில் 1.5கோடியும், மாஸ்டர் படத்தில் 10 கோடி சம்பளமும் பெறப்பட்டதாக கூறிய நிலையில் தற்போது விக்ரம் படத்தில் 10 கோடி கேட்டுள்ளார் விஜய் சேதுபதி.