'மனைவியின் கழுத்தை பிடித்து செவுத்துல அப்படியே வச்சுட்டேன்'.. விஜய் சேதுபதி சொன்ன ஷாக்கிங் தகவல்

Vijay Sethupathi Neeya Naana Thalaivan Thalaivii
By Kathick Jul 29, 2025 05:30 AM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தலைவன் தலைவி. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் கலந்துகொண்டனர்.

அப்போது கணவன் மனைவி உறவு குறித்து பல விஷயங்களை பேசினார்கள். இதில் விஜய் சேதுபதி தனது சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயத்தையும் அங்கு பகிர்ந்துகொண்டார்.

இதில் "இதை நான் பொது மேடையில் சொல்லலாமா என்று தெரியல. ஒருமுறை என் மனைவியின் கழுத்தை பிடித்து செவுத்துல அப்படியே வச்சுட்டேன். அதற்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன். என்னதான் இருந்தாலும் நான் கை வைத்திருக்கக் கூடாது. அப்புறம் ஒரு 5 நிமிஷம் தான் இருக்கும். சரி, தப்பு எல்லாம் இரண்டாம் பட்சம் மேல கை வைக்கிறது ரொம்ப தப்பு என்று சொல்லி அப்போதே மன்னிப்பு கேட்டுட்டேன். அதற்காக நான் ரொம்ப ஃபீல் பண்ணேன்" என கூறியுள்ளார்.

நீயா நானா நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய இந்த விஷயம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.