உங்க சங்காத்தமே வேண்டாம்..பிக்பாஸ் 9ல் இருந்து விலகுகிறாரா விஜய் சேதுபதி?
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது பிக்பாஸ் சீசன் 9. ஏற்கனவே, நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சிஜே, ஆதிரை என வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், வைல்ட் கார்ட்டில் 4 போட்டியாளர்கள் உள்ளே நுழையவுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 9
இந்நிலையில் தற்போது நடந்து வரும் பிக்பாஸ் 9ல் போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதம், அத்துமீறல்களையும் விஜய் சேதுபதியால் சமாளிக்கவே முடியவில்லை என்ற குரல்களும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், விஜய் சேதுபதி இந்த சீசனோடு விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியபோது பலரும் பார்த்து ரசித்தார்கள். வாராவாரம் ஒரு புத்தகத்தை பரிந்துரைப்பது, போட்டியாளர்கள் அத்துமீறியபோது தனக்கேயுரிய பாணியில் அதை கண்டிப்பது, தடுப்பது என்று சிறப்பாக நடந்தி வந்தார். ஆனால் திடீரென அவர் இதிலிருந்து விலக முடிவெடுத்தார்.

விஜய் சேதிபதி அவருக்கு பதில் 8வது சீசனை தன்னால் முடிந்த அளவிற்கு வழி நடத்தினார். இப்படி இருக்க 9வது சீசன் ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்களை அணுகும் முறையில் மாற்றத்தை கொண்டு வந்தார். தற்போது விட்டிற்குள் எல்லைமீறும் போட்டியாளர்களை ஸ்ட்ரிக்ட்டாக கண்டிப்பது என நல்லபடியாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால், நாட்கள் செல்லசெல்ல வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்ள ஆர்மபித்துவிட்டார்கள்.
விலகுகிறாரா விஜய் சேதுபதி
கடந்த வாரம் விஜய் சேதுபதியை வைத்துக்கொண்டே, துஷார், கம்ரூதீன் அடித்துக்கொண்டனர். இதனை அவர் கண்டித்தாலும் இந்த கண்டிப்பில் அவ்வளவு வீரியம் தோன்றவில்லை என்பது பலரின் கருத்து. போட்டியாளர்களை பேசவே விடமாட்டார் என்று கூறும் பலர், விமர்சித்தும் வந்தனர்.

இப்படி தொடர்ந்து விஜய் சேதுபதி மீது விமர்சனங்கள் வந்துக்கொண்டே இருப்பதால் அவரது இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆவதால் இந்த சீசனோடு பிக்பாஸுக்கு பெரிய கும்பிடு போட்டு சினிமாவில் முழு கவனம் செலுத்தவும் என்று அவரது ரசிகர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.
தற்போது வெளியான தகவலின்படி தன்னைப்பற்றி தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் வரும் நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் சேதுபதி கவனித்து வருவதாகவும் இனி பிக்பாஸ் தொகுப்பாளர் ரோல் ஒத்துவராது என்ற முடிவை எடுத்து, இந்த சீசனோடு விலகவிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது பிக்பாஸ் குழுவினர் அறிவித்தால் தான் உண்மை என்னவென்பது தெரியவரும்.