விஜய்க்கு தங்கையாக நடித்த 35 வயதான நடிகை சரண்யா மோகனா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..
குழந்தை நட்சத்திரமாக தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்து பின் ஒரு நாள் ஒரு கனவு படத்தில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா மோகன். கேரள நடிகையாக தமிழில் நடித்து வந்த சரண்யா, நயன் தாராவின் தங்கையாக யாரடி நீ மோகினி படத்திலும் வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்து பிரபலமானார்.
வெண்ணிலா கப்டி குழு படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் துணை நடிகையாக பிஸியாக நடித்து வந்த சரண்யா மோகன், நீண்ட நாள் நண்பர் டாக்டர். அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகன் மற்றும் ஒரு மகளை பெற்றெடுத்தார்.
2014 ஆம் ஆண்டுக்கு பின் நடிப்பில் இருந்து விலகி குடும்பம் குழந்தையை பார்த்து வருகிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருக்கும் சரண்யா தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து க்யூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
35 வயதாகும் சரண்யா மோகனின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்து விஜய்க்கு தங்கையாக நடித்த சரண்யாவா இது என்று ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.