மனைவி சங்கீதாவுடன் பிரச்சனை!! மகன் சஞ்சய்யை ஒதுக்கும் நடிகர் விஜய்..
நடிகர் விஜய் தன் அப்பா மூலம் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமாகி தற்போது டாப் நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான லியோ படம் 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படத்ததை அடுத்து அவரது 68வது படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியல் நுழைவு சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டும் வருகிறார்.
சினிமா, அரசியல் என்று இருக்கும் விஜய் தன் குடும்பத்தை கண்டுக்கொள்வதில்லை என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. அப்படி தன் பெற்றோர்களுடன் மன கசப்பு, மனைவி சங்கீதாவுடன் பிரச்சனை என்று பல செய்திகள் வெளியானது. தன்னை போல் தன் மகன் ஜேசன் சஞ்சய்யும் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற முடிவை மகனிடமே கொடுத்துவிட்டார் விஜய்.
பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சஞ்சய்யை நடிகனாக்க விரும்பினார். ஆனால் அது மகனின் விருப்பம் என்னவோ அவன் செய்யட்டும் என்று கூறினார் விஜய். தற்போது சினிமா படிப்பை முடித்து குறும்படம் இயக்கிய ஜேசன், லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தினை இயக்கவுள்ளார்.
ஆனால் இந்த விசயத்தை சங்கீதா தான் சிபாரிசு செய்து தன் மகனுக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை தற்போது சைலெண்டாக லைக்கா நிறுவனம் போட்டுள்ளார்களாம்.
போயஸ் கார்டனில் போடப்பட்ட புது அலுவலகத்தில் இந்த பூஜை நடந்துள்ளதாகவும் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாம். ஆனால் பூஜைக்கு நடிகர் விஜய் பங்கேற்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தன் மகன் இயக்கும் அறிமுகப்படத்தின் பூஜைக்கு விஜய் வராதது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.