பழசை மறந்து பெற்றோரிடம் ஒன்று சேர்ந்த விஜய்!.. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?
Vijay
S. A. Chandrasekhar
By Dhiviyarajan
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இதையடுத்து இவர் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடிக்க போவதாக பல தகவல் எழுந்து வருகிறது.
விஜய்யின் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தனிப்பட்ட காரணத்தால் விஜய் அவரின் பெற்றோர் எஸ்ஏசி - ஷோபா உடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் விஜய் தனது அம்மா ஷோபா உடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய பெற்றோரின் 50-ம் ஆண்டு திருமண நாளை கொண்டாட தான் விஜய் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.