வீட்டில் போடப்பட்ட கண்டிஷன்.. படப்பிடிப்பில் அந்த விஷயத்தை செய்த தளபதி விஜய்..
Vijay
Actors
Tamil Actors
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் தற்போது அரசியலுக்கு வந்துவிட்டார். ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்துவிட்டார்.
விஜய் குறித்து அவ்வப்போது வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் தற்போது தனது உணவு பழக்கம் குறித்து நடிகர் விஜய்யே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசிய வீடியோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் பேசும் தளபதி விஜய், அசைவ உணவு இல்லாமல் தன்னால் சாப்பிட முடியாது என்று கூறியுள்ளார். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் அசைவம் சாப்பிட கூடாது என சொல்லுவாங்க. அதனால் அந்த நாட்களில் மட்டும் நான் படப்பிடிப்பில் இருக்கும்போது வெளியே சாப்பிடுவேன். அந்த ரூல்ஸ் வீட்டில் மட்டுமே. வெளியே எல்லாம் அந்த ரூல்ஸை பின்பற்ற மாட்டேன் என கூறியுள்ளார்.