அஜித் - CM விஜய் சந்திப்புக்கு பின் இப்படியொரு அரசியல்!! பிரபலம் சொன்ன தகவல்..
அஜித் - CM விஜய் சந்திப்பு
நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் லண்டனில் இருக்கும் சிலவர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் நடக்கும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான பந்தையத்தில் இன்று கலந்து கொண்டுள்ளார்.
அதை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொடங்கி வைக்கவுள்ள நிலையில்ம் அவருடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் அஜித்துடன் உரையாடியபடி சென்ற புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, நடிகை ராதிகா லண்டனுக்கு சென்று அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறார்.
அந்தணன்
இந்நிலையில், விஜய் - அஜித் சந்திப்பு குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் ஒருசில கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், இருவரும் கட்டாயமாக சந்திக்கிறார்கள். அதற்கு பின்னால் பல கணக்குகள் இருக்கிறது. இவ்வளவு நாட்கள் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இப்போது சந்திக்கிறார்கள் என்றால் அரசியல் விஷயமும் இருக்கிறது. இடைத்தேர்தலில் வென்றாகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. லண்டனில் ஒன்று அஜித்தை விஜய் சந்திப்பது தேர்தலில் எதிரொலுக்கும் என கூறியிருக்கிறார் அந்தணன்.