என்னை பற்றி நீங்க என்ன வேணா பேசுங்க..என் கணவர் பத்தி பேசாதீங்க!! சாக்ஷி அகர்வால் ஆவேசம்...

Gossip Today Sakshi Agarwal Tamil Actress
By Jai Sep 12, 2026 10:55 AM GMT
Report

சாக்ஷி அகர்வால்

மாடலிங் துறையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட சாக்ஷி, 2025ல் தன்னுடைய நீண்ட நாள் காதலர் நவநீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

என்னை பற்றி நீங்க என்ன வேணா பேசுங்க..என் கணவர் பத்தி பேசாதீங்க!! சாக்ஷி அகர்வால் ஆவேசம்... | Sakshi Agarwal Reply To Trolls About Husband Sm

திருமணத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் கணவருடன் அவுட்டிங் சென்றும் வருகிறார்.

இந்நிலையில் சாக்ஷி அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய கணவரை பற்றி சில பதிவிட்டு வரும் அநாகரிகமான கமெண்ட்டுகள் குறித்து வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

என் கணவர் பத்தி பேசாதீங்க

அதில், நாங்கள் பதிவிடும் ஒன்று, இரண்டு வீடியோகளில் என் கணவரைப் பற்றி சில போட்ட கமெண்ட்டுகளை பார்த்தேன், அது எனக்கு ரொம்பவே ஹர்ட் ஆச்சு, என்னை பற்றி நீங்க என்ன வேணா பேசுங்க, கல்யாணத்திற்குப்பின் நான் இப்படி டிரெஸ் பண்றேன், அப்படி டிரெஸ் பண்றேன்னு எதை வேணா சொல்லுங்க, எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை.

என்னை பற்றி நீங்க என்ன வேணா பேசுங்க..என் கணவர் பத்தி பேசாதீங்க!! சாக்ஷி அகர்வால் ஆவேசம்... | Sakshi Agarwal Reply To Trolls About Husband Sm

ஆனால் என் வாழ்க்கை துணையை பற்றி கமெண்ட் செய்யும்போது அவர் ஒரு பொது நபர் கிடையாது. நாங்கள் மாலத்தீவு, பாங்காக் போறப்போ எடுக்கிற வீடியோக்கள் எங்களோட சந்தோஷமான தருணங்கள். நாங்கள் ஹாப்பியா இருக்கோம்னு உலகத்துக்கு காட்டத்தான் அதை ஹேர் பண்றோம், ஆனால் சில பாரு அவங்களுக்கு எல்லைமீஈர்ய சுதந்திரம் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு எதை வேணா பேசுறாங்க.

பணத்துக்காகத்தான் நான் அவரை கல்யாணம் செய்து கொண்டேன் என்று சிலர் கமெண்ட் பண்றாங்க. உண்மை என்னவென்றே தெரியாமல், எதுவும் தெரியாமல் ஏன் இப்படி பேசுறீங்க? என தன் கணவரை தேவையில்லாத சோசியல் மீடியா சர்ச்சைக்குள் இழுப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார் சாக்ஷி அகர்வால்.